பிரபல தமிழ் நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற கல்லூரி மாணவர்?

நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற கல்லூரி மாணவர்?

நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற கல்லூரி மாணவர்?

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அபிராமி பாலமுரளி. இவர் மலையாளத்தில் ’தங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள சட்ட கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அபர்ணா பால முரளி உள்பட படக்குழுவினர்களை வரவேற்று பூங்கோத்து வழங்கினார்.

நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற கல்லூரி மாணவர்?

அதை மகிழ்ச்சியுடன் அபர்ணா வாங்கிய போது, அந்த மாணவர் அபர்ணாவுக்கு கைகுலுக்கியதோடு அவரது தோளில் கை போட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபர்ணா அவரிடம் இருந்து விலகி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த மாணவர் இது குறித்து விளக்கம் அளித்தார்.

https://twitter.com/i/status/1615637932819484672

 

தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும் அபர்ணாவின் தீவிர ரசிகன் என்றும் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

அதன் பிறகு மீண்டும் அவர் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்த போது அபர்ணா கையை கொடுக்க மறுத்து அவரை தவிர்த்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.