நடிகை சமந்தா நடிப்பில் உருவான ‘சாகுந்தலம்’ படம் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாகி தற்போது வரை ரூ.10 கோடி தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது அற்புதமான நடிப்புத் திறமையால் புகழ் பெற்ற சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்னடைவைச் சந்தித்தார். அதுமட்டுமின்றி, மயோசிடிஸ் நோய் பாதிப்பும் அவரின் கெரியரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது.
இருப்பினும் மனம் தளராத சமந்தா அவற்றையெல்லாம் வென்று தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார். இந்தநிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு ஒரு பேட்டியில் கூறியதாவது;-
சமந்தா விவாகரத்துக்குப் பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். வாழ்வாதாரத்திற்காக அதை அவர் செய்தார். ஸ்டார் ஹீரோயின் என்ற அந்தஸ்தை இழந்த பிறகு தனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளிலும் நடித்து வருகிறார்.
கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது. அவருக்கு வரும் வாய்ப்பை பயன்படுத்தி தொடர்வார்.
யசோதா படத்தின் புரமோஷனின் போது சமந்தா அழுது கண்ணீர் சிந்தினார், அதன்மூலம் வெற்றி பெற முயன்றார். இப்போது சகுந்தலம் படத்திற்கும் அதே யுக்தியை கையாண்டிருக்கிறார்.
இறப்பதற்கு முன் இப்படியொரு வேடத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறி அனுதாபத்தை அடைய முயற்சிக்கிறார். அதே சமயம், தொண்டை சரியாக இல்லாததால், குரல் போனதாக பொய் சொல்கிறார். ஒவ்வொரு முறையும் சென்டிமெண்ட் கைகொடுக்காது.
கதாபாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலை செய்யாது.
ஸ்டார் ஹீரோயின் என்கிற பட்டத்தை இழந்த சமந்தா எப்படி சகுந்தலா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் என்பது தான் எனக்குள்ள பெரிய கேள்வி”எனறு தயாரிப்பாளர் சிட்டிபாபு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.