தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவலை மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மணிரத்னம் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 9 மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே தற்போது முடிவடைந்து உள்ளது.
இதனை அடுத்து, அடுத்த ஆண்டு இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.