பொன்னியின் செல்வன் படத்தில் அரளவிட்ட 5 பெண்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் காவியம் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் சில தினங்களில் வெளிவரவுள்ளது.

இந்த பொன்னியின் செல்வன் கதையை தூக்கி நிறுத்திய ஐந்து பெண் கதாபாத்திரங்கள் பற்றி இங்கு காண்போம்.

பூங்குழலி

பொன்னியின் செல்வன் கதையை பொருத்தவரையில் இந்த கதாபாத்திரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வரும் இந்த பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சமுத்திரகுமாரி என்று அழைக்கப்படும் இந்த கதாபாத்திரம் வந்திய தேவன் மற்றும் பொன்னியின் செல்வனை படகுமூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்வது போன்று காட்டப்பட்டிருக்கும். மிகவும் துணிச்சலான, புத்திசாலித்தனமான பெண்ணாக இருக்கும் இந்த பூங்குழலியை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Also Read : தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

வானதி

இளவரசி குந்தவை தேவியுடன் நெருக்கமாக இருக்கும் பெண்ணான வானதிக்கு பொன்னியின் செல்வனை திருமணம் செய்வதுதான் பிறவி பலனே. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் மனதில் காதலை தேக்கி வைத்து காத்திருப்பது போன்று காட்டப்பட்டிருக்கும். மிகவும் கூச்ச சுபாவம் உள்ள இந்த பெண் கதாபாத்திரம் ஒரு சூழ்நிலையில் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தன் தைரியத்தை நிரூபித்து இருப்பார்.

அது ஒன்றே அவர் பொன்னியின் செல்வனுக்கு துணைவியாக வர தகுதியானவர் என்பது போல் கல்கி காட்டி இருப்பார். அந்த வகையில் இந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு மற்றும் மலையாள நடிகை சோபிதா நடித்திருக்கிறார்.

நந்தினி

பார்ப்பவர்களை அசர வைக்கும் அழகுடன் இருக்கும் இந்த நந்தினி தான் சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் தஞ்சாவூருக்கு காலடி எடுத்து வைப்பார். பழிவாங்கும் வெறியில் இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு வில்லத்தனமாக இருக்கும்.

அதற்காக அவர் வயதானவரை திருமணம் செய்வதிலிருந்து, பாண்டியர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்வது என்று அவருடைய கதாபாத்திரம் பலரையும் ஆச்சரியப்படுத்தும். ஒரு பெண்ணால் இந்த அளவுக்கு துணிய முடியுமா என்ற ரீதியில் இந்த கேரக்டர் காட்டப்பட்டிருக்கும். இந்த கதாபாத்திரத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மிக பொருத்தமாக இருக்கிறார் என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய கருத்து.

Also read: ‘பொன்னியின் செல்வன் 2’ எப்போது ரிலீஸ்?

குந்தவை

நந்தினியின் பழிவாங்கும் குணத்தை அறிந்து கொண்டு சரியாக காய் நகர்த்தும் புத்திசாலித்தனமான இளவரசி கேரக்டர் தான் இந்த குந்தவை. அரசகுல பெண்களுக்கு இருக்கும் மிடுக்கும், வீரமும், புத்திசாலித்தனமும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும். வந்திய தேவனை ஒற்றனாக இலங்கைக்கு அனுப்புவதில் இருந்து ராஜ்யத்தின் நலனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் இந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார்.

மந்தாகினி

சுந்தர சோழரின் முதல் மனைவியான இந்த கதாபாத்திரம் பொன்னியின் செல்வனுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் உடனடியாக வந்து நிற்கும். சிறுவயதில் பொன்னியின் செல்வன் ஆற்றில் தவறி விழும் பொழுது காப்பாற்றும் இவர் அதன் பிறகு அவரை ஒவ்வொரு இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுவார்.

இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் தான் நடித்திருக்கிறார். ஏனென்றால் இவரின் மகள் தான் நந்தினி. இருவரும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பதால் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரு வேடங்களை ஏற்று நடித்துள்ளார். அதிலும் இந்த மந்தாகினி கதாபாத்திரம் ஆண்களுக்கு நிகராக வீரத்தில் சிறந்த கதாபாத்திரமாக காட்டப்பட்டு இருக்கும்.

மேற்கண்ட இந்த ஐந்து பெண் கதாபாத்திரங்கள் தான் பொன்னியின் செல்வன் கதையை தாங்கி பிடித்த கேரக்டர்களாக இருக்கின்றது.