பிரதீப் ரங்கநாதன்
ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படம் மூலம் கதாநாயகனாகி மாஸ் வெற்றியையும் பெற்றார். இந்த படம் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து உள்ள நிலையில், வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடிக்க நான் விரும்பியதும் பலர் தயங்கினர். ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம் என்றனர்.
ஹீரோவாக எதற்கு நடிக்கிறாய் என்றும் பேசினர். ஆனாலும் மலை ஏற மற்ற உபகரணங்களை விட மலை முக்கியம் என்று கருதினேன். லவ் டுடே கதையை மலையாக நம்பி அதில் ஏறினேன். வெற்றி கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் லவ் டுடே வசூல் ஈட்டி உள்ளது. கதையின் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் மலை ஏறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்றார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.