Varalaxmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், “சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சனைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் கூட அட்ஜஸ்ட் பண்ண சொல்வார்கள் “.
“அதற்கு நான் எனக்கு அப்படி பட்ட பட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். நான் இரவு நிம்மதியாக தூங்க வேண்டும். எந்த ஒரு குற்ற உணர்வு இருக்க கூடாது. பட வாய்ப்புக்காக இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள், நடிகர் சரத்குமாரின் மகளுக்கே இந்த நிலைமையா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.