தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்.. ஜோதிகா என்ன சொன்னார் தெரியுமா?

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்

’காதல் என்பது பொதுவுடமை’ என்ற தமிழில் முதல் லெஸ்பியன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தில் வெளியானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதி பெரியசாமி, ‘ஜெய்பீம்’ படத்தில் நடித்த லிஜோமால் மற்றும் ரோகிணி, அனுஷா, தீபா, வினித் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்திருக்கிறார். ஆர்.எல். விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ரவி பாண்டியன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

தமிழின் முதல் லெஸ்பியன் திரைப்படம்

இந்த நிலையில், காதல் என்பது இரண்டு வெவ்வேறு பாலினங்களுக்கு ஏற்படுவது மட்டுமல்ல, இரண்டு தூய்மையான இதயங்கள் ஒன்று சேர்வது’ என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லெஸ்பியன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.