பாக்யராஜின் முதல் கல்யாணம் இரண்டே வருடத்தில் முடிவு.. காரணம் என்ன..?

இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்ற பாக்யராஜ் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இவ்வாறு பிசியாக இருக்கும் பாக்யராஜின் குடும்பமே திரையுலகில் பிரபலமானவர்கள் தான்.

அந்த வகையில் இவருடைய மனைவி பூர்ணிமா 80 காலகட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோன்று இவருடைய மகன் சாந்தனு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பாக்யராஜ் நடிகை பிரவீனாவை காதலித்து கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுடைய திருமண வாழ்வு பிரவீனாவின் மரணத்தால் முடிவுக்கு வந்தது.

அந்த வகையில் அவர் 1983 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இவர் 1976 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பாக்யராஜின் பாமா ருக்மணி திரைப்படத்தில் நடித்தார்.

அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் துளிர்த்தது. அதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில காலம் கூட சேர்ந்து வாழவில்லை.மேலும் இப்படி பாக்யராஜின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் அதை தொடர்ந்து பூர்ணிமா முந்தானை முடிச்சு திரைப்படத்திலும் பாக்யராஜின் முதல் மனைவியாக ஓரிரு காட்சியில் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையிலேயே இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது இவர்கள் இருவரும் 38 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.