மயில்சாமி: நடிகர் மயில்சாமியிடம் கடைசியாக இருந்த பணம் குறித்த தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மயில்சாமி, கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மயில்சாமி கடைசியாக நடித்துள்ள‘கிளாஸ்மேட்ஸ்’ படம். இப்படத்தை சரவண சக்தி இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் இருவரும் கலந்துகொண்டனர்.
அப்போது மயில்சாமியின் மகன்கள் இருவரும் அவர்களது அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேடையில், மயில்சாமியுடனயே இருக்கும் சக்தி என்பவரை அவரது மகன்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, மேடையில் சக்தி பேசுகையில்,
மயில்சாமி கடைசியாக ஒரு படத்தில் நடிக்க, ரூ.30 ஆயிரம் சம்பளமாக வாங்கினார். அதில், 25000 ரூபாய் ஒருவருக்கும், எனக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார். மிச்சம் இருந்த ஆயிரம் ரூபாயை அவரது மகன்களுக்கும் கொடுத்து விட்டார்.
எல்லா பணத்தையும் கொடுத்து விட்டு, அவரது சட்டை பாக்கெட்டில் வெறும் ரூ.30 யை மட்டும் வைத்துக்கொண்டார் என்று கூறி கண்கலங்கினார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.