ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு நடிகை ஐஸ்வர்யா பதிலடி!

ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு நடிகை ஐஸ்வர்யா பதிலடி!

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா. ஆறு படத்தில் இவர் நடித்த சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் இவரை பிரபலமாக்கியது.

தற்போது யூடியூப் சேனல் ஒன்றை ஐஸ்வர்யா நடத்தி வருகிறார். அதில், பெண்கள் தொடர்பான சோப்பு, அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விளம்பரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், அவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மிகவும் ஆபாசமான முறையற்ற தகவல்களை இணையவாசிகள் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு நடிகை ஐஸ்வர்யா பதிலடி!

ஒருகட்டத்தில் கோபமான ஐஸ்வர்யா, “அறுவருக்கத்தக்க ஆபாச புகைப்படங்களை எனக்கு அனுப்பியுள்ளனர். இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலயா, 52 வயது கிழவிடா நானு. நான் சோப்புதான் விற்கிறேன், என்னை விற்கவில்லை” என்று ஆதங்கமாய் கேள்வி எழுப்பி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.