கொரிய பாடகர் மூன்பின் மர்ம மரணம்: தென்கொரியாவை சேர்ந்த பிரபல கொரிய பாப் பாடகர் மூன்பின். வெறும் 25 வயதே ஆன இவர் புகழ்பெற்ற பாய் பேண்ட் ஆஸ்ட்ரோ குழுவின் பாடகர்.
இந்த நிலையில், மூன்பின் தனது குடியிருப்பில் புதன்கிழமை இறந்து கிடந்தது கொரிய ரசிகர்களையும் இசை உலகத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மூன்பின் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என முதல் கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக கொரியாவில் பாடகர்களும் இளம் நடிகர்களும் மர்மமான முறையில் மரணிப்பது தொடர்கதையாகி உள்ளது. சிலர் தற்கொலையும் செய்து கொண்டு இறந்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபெண்டாஜியோ லேபிள் டிரெய்னிங்கில் பாடகராக அறிமுகமானவர் மூன்பின் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்பின்னின் ஏகப்பட்ட இசை ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.