நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரது திருமணம் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணம் செய்து இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இருவரும் தங்களது குடும்பத்தினருடன் அதனை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர்.
எனினும், அதனை சிறப்பிக்க அவரது ரசிகர்கள் முன்பே முடிவு செய்து அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கினர். அவர்களது திருமண நாளில் இருவரையும் வாழ்த்தி சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் 23-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்ததுடன், #ஷாலினிஅஜித்குமார் என்ற ஹேஷ் டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.