ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் சினிமாவின் அம்மா கதாபாத்திரங்கள்!

தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமெண்டுக்கு எப்போதுமே அதிக மவுசு உள்ளது. அதுமட்டுமில்லை தாய் பாசம், தாய் மீது சத்தியம், என் அம்மா, தாய்க்கு பின் தாரம், தாயம்மா இப்படி ஏகப்பட்ட அம்மாவை குறிக்கும் டைட்டிலும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. 

இயக்குனர் எழுதிய கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது, அந்த ரோலில் நடிக்கும் நடிகைகள். அவர்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தால் மட்டும் தான் இயக்குனரின் உழைப்பு வெற்றிப்பெறும். 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இன்றும் கொண்டாடும் பெஸ்ட் அம்மா கதாபாத்திரங்கள் குறித்து பார்ப்போம். 

சரண்யா பொன்வண்ணன்

இன்றைய ஜென்ரேஷனுக்கு ஏற்ற அம்மா எனப் பெயர் பெற்றவர் சரண்யா பொன்வண்ணன். இவர் அம்மாவாக நடித்தாலே அந்த படம் இடம் ஹிட் என்ற நிலைக்கு வந்து விட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்கு தேசிய விருதும் வென்றார். ஒகே ஓகே, வேலையில்லா பட்டதாரி, களவாணி, கோலமாவு கோகிலா, மகளிர் மட்டும், எம்டன் மகன், ராம், பாண்டி போன்ற படங்களில் இவர் நடித்த அம்மா ரோல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடுகின்றனர். 

ரம்யா கிருஷ்ணன்

பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமி தேவி ரோல் ஒன்று போதும். ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடித்த அம்மா ரோல்களில் தி பெஸ்ட். இப்போது அந்த படத்தில் இடம்பெறும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்த்து போகின்றனர். 

ஊர்வசி

ஜாலியான அம்மா என்றால் அது ஊர்வசி தான். சிவா மனசுல சக்தி, வாமணன், வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் ஊர்வசி நடித்த ரோல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. சூரரைப் போற்று படத்தில் சீரியஸ் அம்மாவாக நடித்து கிளைமாக்ஸில் எல்லோரையும் அழ வைத்தார். 

நதியா

இளமையான அம்மா என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வரும் முகம் நதியாவுடையது தான். எம் கும்ரன், தாமிரபரணி, அடே சுந்தரா, வாரியர், மிஸ் இந்தியா போன்ற படங்களில் யங் அம்மா லுக்கில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். 

ராதிகா

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகச் சிறந்த நடிகை. எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் பட்டையை கிளப்புவார். அதிலும் அம்மா கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். தர்மதுரை, வானம் கொட்டட்டும், பூஜை, நானும் ரவுடி தான், தங்கமகன், சென்னையில் ஒரு நாள் இப்படி ஏகப்பட்ட படங்கள் உள்ளன. 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.