சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் கன்னத்தில் குழி விழ அழகு பதுமையாக அறிமுகமானவர் சித்தி இத்னானி. அடுத்ததாக தி கேரளா ஸ்டோரி படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து இருந்தார்.
அதா சர்மா மெயின் லீடு ரோலில் நடித்திருந்த தி கேரளா ஸ்டோரி படம் கடும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், சித்தி இத்னானி அந்த படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை இன்ஸ்டாகிராமில் இருந்தே தொடங்கி விட்டதாக பதிவிட்டுள்ளார்.
முதல் படத்திலேயே அதிக மேக்கப் இல்லாத தனது அழகால் சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்ட சித்தி இத்னானி அடுத்து ஆர்யாவின் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ள சித்தி இத்னானி நைட்டி அணிந்து கொண்டு தலையில் புல்லு கட்டை சுமந்துக் கொண்டு செம கேஷுவலாக செல்லும் படத்தின் ஸ்டில் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கான ப்ரமோஷனை ஆரம்பித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.