‘பையா 2’ படத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா? காத்திருக்கும் ரசிகர்கள்

paiya-2-movie

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 2010 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ‘பையா’.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூர் நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் போனிகபூர், தனது மகள் ஜான்வி கபூர் ’பையா 2’ உள்பட எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்று கூறினார்.

இதையடுத்து ‘பையா 2’ படத்தில் ஆர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘பையா 2’ படத்தில் முதல் பாகத்தில் நடித்த கார்த்தியே நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் 28வது படமாக இந்த படம் அமையும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், தமன்னாவும் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.