இளம் வயதில் வாடகை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த ஒரு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த நடிகை தான் ராஷ்மிகா மந்தனா.
ஆனால் ஒரு கட்டத்தில் ராஷ்மிகாவின் தந்தை மிகப்பெரிய தேயிலை தோட்டத்திற்கே முதலாளியாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் தனது பட்டப் படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் களம் இறங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.
தொடர்ச்சியாக தமிழில் வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த அவர், தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த 1996ம் ஆண்டு பிறந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு வயது 28, அதேபோல அவருடைய தங்கை ஷிமாவிற்கு வயது இப்போது ஒன்பது.
ராஷ்மிகா பிறந்து சுமார் 19 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை அவர். தனது தங்கையோடு மிக நெருக்கமான பாசத்தோடு பழகி வரும் ராஷ்மிகா, அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.