இந்த வருடம் மிகவும் சவாலானது.. செர்பியாவில் சமந்தா பிரார்த்தனை

செர்பியாவில் உள்ள பழமையான சர்ச் ஒன்றுக்கு சென்ற சமந்தா அதன்பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

’கடந்த வருடத்தில் எனக்கு வித்தியாசமான நோய் கண்டறியப்பட்டு அதனுடன் பல போராட்டங்கள் நடந்தது. என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன் என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மிகப்பெரிய அளவில் பாதித்தது.

ஆனால் அதே நேரத்தில் பிரார்த்தனை, பூஜைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் ஆகியவை என்னை வலிமையாகவும் அமைதியாகவும் மாற உதவியது.

எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கற்றுக் கொடுத்த ஆண்டுதான் கடந்த ஆண்டு. நாம் ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மீதி உள்ளவற்றை விட்டு விட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஆண்டு.

இந்த வருடம் மிகவும் சவாலானது

மேலும் நாம் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும், சில நேரங்களில் வெற்றி நம்மை நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் முன்னோக்கி செயல்படுவதே ஒரு வெற்றிதான்.

மீண்டும் தானாக சரியாகும் என்று நாம் காத்திருக்க கூடாது, கடந்த காலத்தில் உள்ள சோகங்களையும் தோல்வியையும் நினைத்து மூழ்கி விடக்கூடாது, நாம் நேசிப்பவர்களிடம் நம்மை நேசிப்பவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும்.

வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது, உங்களில் பலர் மிக கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த வருடம் மிகவும் சவாலானது

தெய்வங்கள் தாமதம் செய்யலாம், ஆனால் கண்டிப்பாக அவர்கள் கைவிட மாட்டார்கள், அமைதி அன்பு மகிழ்ச்சி மற்றும் வலிமையை தேடுபவர்களுக்கு ஒருபோதும் தெய்வம் கைவிடாது’ என்று பதிவு செய்துள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.