சின்ன பொண்ணு கேட்குதா?… பப்லுவின் நெத்தியடி பதில்!

நடிகர் பப்லு

57வயதான நடிகர் பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இணையத்தில் பப்லுக்கு எதிராக பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் பப்லு யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது காதலியுடன் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், இந்த வயதிலும்,யாருக்கும் இப்படி ஒரு பெண்கிடைக்கமாட்டாள் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதுல உங்களுக்கு ஏன் வயிறு எறிகிறது என்றார் பப்லு.

என் முதல் மனைவி பீனாவை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை.

24 வயது பெண்ணை திருமணம் செய்வதால், பீனாவிற்கு நிச்சயம் வருத்தம் இருக்கும். இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் இருந்தோம். ஆனால், 3 மாதத்திற்கு முன்பு விவாகரத்து கிடைத்துவிட்டது.

6 வருடங்களாக மனைவியை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு வீட்டில் அன்பு கிடைத்து இருந்தால் நான் வெளியில் போய் இருக்கமாட்டேன். எனக்கு இளம் பெண் நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை கொடுத்து இருக்கிறாள்.

எங்கள் இருவருக்கும் திருமணம் இன்னும் நடக்கவில்லை, இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். இந்த வயதில் பொம்பள சோக்கு கேக்குதா? பணம் இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவியா என கேட்கின்றனர்.

ஆமாம், நான் சம்பாதிக்கிறேன், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் உனக்கு ஏன் வயிறு எறிது என நச்சுனு பதில் கொடுத்தார்.