குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நடிகர் வடிவேலு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டுபரமக்குடியில் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும்.

இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். சமீபத்தில் அவரது தாயார் மறைந்த நிலையில் கோவிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே நின்று வழிபாடு செய்தார்.

சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவை கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.