மறைந்தார் மனோபாலா: சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் மனோபலா(69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
Also Read – அரசியலில் குதிக்கிறாரா நடிகை திரிஷா? அவரே கூறிய விளக்கம்
கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.
1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார்.
ரஜினிகாந்தை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கி உள்ளார். 1987 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா, செந்தில் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
Also Read – வலியால் துடித்த ஷாலினி! குற்ற உணர்ச்சியில் மூழ்கிய அஜித்…!
மனோபாலா இயக்கத்தில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது. விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தார்கள்.
1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் மல்லுவேட்டி மைனர் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சீதா, ஷோபனா, செந்தில் மற்றும் வினு சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
மனோபாலா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படம் வெளிவந்தது. 1993 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் முற்றுகை திரைப்படம் வெளிவந்தது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.