தன்னிடம் தவறாக நடந்த நடிகரை அறைய அவர் பதிலுக்கு தன்னை அறைந்ததாக பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி கூறியிருக்கிறார்.
கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா ஃபதேஹி. தற்போது மும்பையில் தங்கி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார்.
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா ஃபதேஹி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டார்.
ஆயுஷ்மான் குரானாவின் ஆக்ஷன் ஹீரோ படத்தை விளம்பரம் செய்ய தி கபில் சர்மா நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோரா ஃபதேஹி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் அப்பொழுது சொன்னது பற்றி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கபில் சர்மா நிகழ்ச்சியில் நோரா ஃபதேஹி கூறியதாவது, என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார் என்றார்.
நோரா மேலும் கூறியதாவது, நானும் பதிலுக்கு அந்த நடிகரை அறைந்தேன். அவர் மீண்டும் என்னை அறைந்ததுடன் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். நானும் அவரின் தலைமுடியை பிடித்து இழுத்தேன். அது ரொம்ப மோசமான சண்டையாக இருந்தது என்றார்.
இப்படி ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டே கூறினார் நோரா ஃபதேஹி. அதை கேட்ட கபில் சர்மாவோ, அந்த நடிகர் நிச்சயம் கஷ்டப்படுவார் என்றார். கண்டிப்பாக, அந்த நாய் என்று கூறினார் நோரா ஃபதேஹி.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.