ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்ஹாசன்.. காரணம் இதுதானாம்!

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

ரஜினிகாந்த் – கமல்ஹாசன்

அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பின் வில்லனாக மாறி ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறியவர் ரஜினிகாந்த்.

ஆனால், ஐந்து வயது முதலே சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன், ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தொடர்ந்து ரஜினி, கமல் இருவரையுமே வைத்து பல படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

இவ்வறான ஒரு நிலையில், ஏவிஎம் நிறுவனம் ரஜினி, கமல் என இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்து எஸ்.பி.முத்துராமனை அழைத்து பேசியது.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

இதுபற்றி எஸ்.பி.முத்துராமன் ரஜினியை சந்தித்து கூறியபோது மகிழ்ச்சியுடன் ரஜினி ஒப்புக்கொண்டார்.

கமலை சந்தித்து பேசிய போது கமல் முகத்தில் ஒரு தயக்கம் இருந்துள்ளது. இதுபற்றி கேட்க ‘ஏவிஎம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சிதான். ஆனால், இனிமேல் நானும், ரஜினியும் இணைந்து படம் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அவருக்கு என ஒரு ஸ்டைல். எனக்கென தனி பாணி இருக்கிறது. ’ என சொல்லிவிட்டார்.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

இதன்பின்னர் ரஜினியை வைத்து ‘முரட்டுக்காளை’ படம் எடுக்கப்பட்டது. அதன்பின் எவிஎம் நிறுவனத்திற்காக ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமல் நடித்து கொடுத்தார்.

இந்த தகவலை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘புகழாத வாயில்லை’ மாட்டுக்கார வேலன் செய்த தரமான சம்பவம்!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.