ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கனெக்ட். இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் கனெக்ட் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தான் கனெக்ட் படத்தை எடுத்துள்ளனர்.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபத்தை இப்படம் பார்த்துள்ளது.
அதாவது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கனெக்ட் படத்தை கிட்டத்தட்ட 15 கோடிக்கு வாங்கி உள்ளதாம்.