விக்கியை தூக்கிவிட… 10 வயது வித்தியாசமுள்ள நடிகருடன் நயன்தாரா…!

இயக்குநர் விக்னேஷ் சிவனை அஜித்த தனது ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக தூக்கிய பிறகு மூலையில் முடங்கிய விக்கியை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்று, 10 வயது வித்தியாசம் உள்ள நடிகருக்கு ஜோடியாக நயன்தாரா தயாராகி விட்டார்.

நயன்தாராவுக்காகவது எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவனும் களத்தில் இறங்கிவிட்டார். தற்போது பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

படத்தின் பிரதீப் ரங்கநாதனுக்கு 10 வயது வித்தியாசம் உள்ள நயன்தாரா ஜோடியாக முக்கிய கேரக்டரில் நடிக்க முடிவாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

உலக நாயகன் கமலஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் இந்த படத்தில் பட்ஜெட் 45 கோடி செலவில் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு எல்ஐசி என முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த படத்தை வெற்றி படமாக்கி விக்னேஷ் சிவன் தலைநிமிர வேண்டும் என்று நயன்தாரா விரும்புகிறார்.

அஜித் தன்னை தூக்கி எறிந்ததை இப்போது வரை ஜீரணிக்க முடியாமல் இருக்கும் விக்னேஷ் சிவன், நிச்சயம் இந்த படத்தின் மூலம் அவருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வெறித்தனத்தில் இருக்கிறாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.