பல ஆண்கள் அதை பார்த்து பயந்து விட்டார்கள் – பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சினிமா துறையில் ஆண்களுக்கு அதிக ஊதியமும் பெண்களுக்குக் குறைவான ஊதியமும் தரப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா,

“நான் என்னுடைய வாழ்க்கையில் பல ஆண்களுடைய வளர்ச்சியை பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து நான் பயந்தது இல்லை.

என்னுடைய வெற்றிகளையும், சாதனைகளையும் கண்டு பல ஆண்கள் பயந்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது, சாதனைகள் புரிவதெல்லாம் அவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.

என்னுடைய தந்தை ராணுவத்தில்தான் இருந்தார். என்னுடைய அம்மாவும் வேலை செய்து அப்பாவை விடவும் அதிகம் சம்பாதித்தார். அவர்களுக்குள் எந்த கருத்துவேறு பாடும் இல்லை. அப்படி தான் அனைவரும் இருக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.