அஜித் படக் கதையை மாற்ற சொன்ன ரஜினி …. இயக்குநரால் மண்ணை கவ்விய படம்!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்குனர் லிங்குசாமி  இயக்கினார். இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்த நிலையில் லிங்குசாமியின் அடுத்த படம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், ரன் படத்தின் பார்ட்-2 விரைவில் என்று தகவல் வெளியாகியுள்ளமு. 2002ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் ரன்.

இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் நடிக்க விரும்பியது குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “ரன் படம் வெளியான போது அதனை பார்த்த ரஜினிகாந்த் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். ரன் படத்தில் வரும் பல காட்சிகளை அவர் நினைவு கூர்ந்து “பாதாள நடைபாதையில் வரும் ஷட்டரை மூடும் சண்டை காட்சி மிகப்பிரமாதமாக இருக்கிறது என்று நெகிழ்ந்து கூறினார்.

அதற்கு பிறகு என்னிடம் அடுத்த படம் என்னவென்று கேட்டார், நான் ஜி படம் என்று கூறி படத்தின் கதையை கூறினேன். ஆனால் அவர் என்னிடம் கேட்டது இந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று.

ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் ஒரு கல்லூரி மாணவன் எனவே உங்களுக்கு இந்த கதை சரியாக இருக்காது என்று நான் தெரிவித்தேன். ஆனால் இந்த கதையில் கல்லூரிக்கு பதிலாக நிறுவனமாக வைத்து கொண்டு அங்கே தேர்தல் நடக்கிறது, அதில் நான் வெற்றி பெற்று வருவதாக கதையா வைத்துக்கொள்வோம் என்று கூறினார்.

ஆனால் நான் அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படத்தை எடுக்க விரும்பியதால் நான் ரஜினிகாந்த் கூறியதற்கு மறுத்து விட்டேன் என்று அந்த பேட்டியில் கூறினார் இயக்குனர் லிங்குசாமி.

ஆனால் அஜித் கதாநாயகனாக நடித்து த்ரிஷா கதாநாயகியாக நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான அந்த படம் தோல்விடையைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.