ரஜினிகாந்தால் நடன இயக்குனராக மாறிய ஸ்டன்ட் உதவியாளர்… யார்ன்னு தெரியுமா?

ரஜினிகாந்தால் நடன இயக்குனராக மாறிய ஸ்டன்ட் உதவியாளர்.

1980களில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் கலைஞராக திகழ்ந்த சூப்பர் சுப்பராயனிடம் ஒரு இளைஞர் உதவியாளராக சேர்கிறார்.

அந்த சமயத்தில் ஒரு ரஜினிகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் சுப்பராயனோடு உதவியாளராக சென்றார் அந்த இளைஞர்.

அங்கே அந்த இளைஞன், ரஜினிகாந்த்தை பார்த்து ரஜினிகாந்த் போலவே நடப்பது, ரஜினிகாந்த் போலவே நடனமாடுவது என செய்து கொண்டிருந்தாராம்.

ரஜினிகாந்தால் நடன இயக்குனராக மாறிய ஸ்டன்ட் உதவியாளர்.

இதனை கவனித்த ரஜினிகாந்த் ஒரு நாள் அந்த இளைஞரை அழைத்து “உனக்கு சினிமாவுல என்ன ஆகனும்ன்னு ஆசை?” என கேட்டாராம்.

இதையும் படிங்க: ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்ஹாசன்.. காரணம் இதுதானாம்!

அதற்கு அந்த இளைஞர், “ சார் எனக்கு நடனத்தில் ஆர்வம் உண்டு. இருந்தாலும்…” என்று இழுத்திருக்கின்றார். பின்னர் ரஜினியின் வற்புறுத்தால் உண்மையை சொல்லி இருக்கின்றார்.

அதாவது, “அசோஷியேஷனில் சேர்வது மிகவும் கடினமான காரியம்” என்று கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரஜினி தனது சிபாரிசு கடிதத்தை எழுதி இளைஞனிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

ரஜினிகாந்தால் நடன இயக்குனராக மாறிய ஸ்டன்ட் உதவியாளர்.

ரஜினியின் மேல் உள்ள மரியாதை காரணமாக அந்த இளைஞரை உடனே சேர்த்துக்கொண்ட நிலையில், அவர் நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் நடனத்தை கற்றுக்கொண்டார்.

இவ்வாறு ரஜினிகாந்த்தின் உதவியால் மிகப் பெரிய நடன இயக்குனர் ஆன அந்த இளைஞர் வேறு யாருமல்ல. நடிகர் ராகவா லாரன்ஸ் தான். இதனால் தான் இன்று வரை அவர் ரஜினியின் மீது இந்தளவு மரியாதை வைத்திருக்கிறார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.