இரண்டாவது முறை நடந்த சீரியல் நடிகையின் திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஜீ தமிழில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மாவுக்கு பூவே பூச்சூடவா என்ற தொடரில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் நடிக்கும் போது அதே சீரியலில் நடித்த மதன் என்பவருடன் காதல் ஏற்பட இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இப்போது ரேஷ்மா ராடான் நிறுவனம் இயக்கத்தில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது மதன்-ரேஷ்மா இருவரும் இரண்டாவது முறை துளசி மாலை அணிந்து திருமணம் செய்துகொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/CsLEJuZJnmO/?img_index=1

 

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.