வைத்தியசாலையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் பாடகி பி.சுசீலா

பாடகி பி.சுசீலா

பாடகி பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பி.சுசிலா சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக, பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். நலமுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். நான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.