தல தோனி ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு மீண்டும் ரிலீஸாகும் MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் தோனி வாழ்கை வரலாற்று திரைப்படமாக கடந்த 2016 ம் ஆண்டு வெளியான திரைப்படம் எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி.

அனைத்து மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் இப்படம் பெற்றது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் எம் எஸ் தோனியாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தத்ரூபமாக நடித்திருந்தார்.

மேலும் படத்தில் இவருடன் கியாரா அத்வானி, தீஷா பத்தானி, அனுபம் கேர், பூமிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்திய திரையுலகில் வெளியான ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் ரசிகர்கள் பெருமளவு கொண்டாடிய படமாக எம் எஸ் தோனி திரைப்படம் இருந்து வருகிறது.

திரைப்படம் வெளியாகி 7 வருடம் நிறைவடைந்த நிலையில் எம் எஸ் தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை மீண்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி அப்படம் வரும் மே மாதம் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் அப்பதிவினை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.