தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தையும் லைக்காவுடன் இணைந்து மணிரத்தினம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் உடன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மணிரத்தினம் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம்.

அதாவது சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உச்ச நடிகர் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் புறக்கணிக்கின்றனர்.

இதற்கு காரணம் ஒரு புறம் நிப்போட்டிசம் என்று சொன்னாலும், படத்தின் டிக்கெட் விலை காரணமாகத்தான் இந்த படங்கள் ஓடவில்லை என கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மணிரத்தினம், பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் 100 ரூபாய் மட்டுமே வசூலிக்குமாறு மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏழை, எளிய மக்களும் இந்த படத்தை பார்க்க வசதியாக இருக்கும் என்பதற்காக மணிரத்தினம் இவ்வாறு செய்து உள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் மணிரத்தினம் தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு சாதுரியமான முடிவை எடுத்து உள்ளார்.