வெளுத்து வாங்கியதா? இல்லை விரக்தி அளித்ததா ‘வாரிசு’?

Varisu Movie Review: வாரிசு விமர்சனம்

தொழிலதிபரான சரத்குமார் தனக்கு அடுத்து தனது சிம்மாசனத்தில் அமரப் போகும் வாரிசு யார் என்பதை முடிவு செய்ய மூன்று மகன்களுக்கு இடையே போட்டி வைக்க முயல்கிறார்.

ஆனால், அது பிடிக்காமல் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் விஜய் மீண்டும் குடும்பத்திற்குள் வந்து அங்கே உள்ள பிரச்சனைகளை எப்படி களைந்தார் என்பது தான் வாரிசு படத்தின் கதை.

அப்பாவின் அரியாசனத்திற்கு ஆசைப்படாத மகனாக வீட்டை விட்டு புறப்பட்டு செல்லும் விஜய் அம்மா ஜெயசுதாவின் பாசத்திற்கு கட்டுப்பட்டு சரத்குமார் – ஜெயசுதாவின் 60வது திருமண விழாவுக்காக மீண்டும் வீட்டுக்கு 7 ஆண்டுகள் கழித்து வருகிறார். அதன் பிறகு வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கிறது. அங்கே இருந்து படம் ஆரம்பம் ஆகிறது.

Varisu Movie Review: 'வாரிசு' விமர்சனம்

வாரிசு படத்தின் ட்ரெய்லரில் பிரகாஷ் ராஜ் தான் வில்லனாக காட்டப்பட்ட நிலையில், குடும்பத்தில் இருக்கும் அண்ணன்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் இருவரும் விஜய் மீண்டும் வந்த நிலையில் எப்படி பொறாமை காரணமாக வில்லன்கள் ஆகின்றனர் என்றும் அவர்களை சமாளித்து திருத்துகிறாரா? அல்லது துவம்சம் செய்கிறாரா விஜய் என்பது தான் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ்.

எப்படி இருக்கு ‘துணிவு’ – விமர்சனம்

வாரிசு படத்தின் ட்ரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க இளமை துள்ளல் உடன் உடம்பை வில்லாக வளைத்து ஆடுகிறார் விஜய். ஆக்‌ஷன் காட்சிகளில் தளபதியாக மாறி எதிரிகளை துவம்சம் செய்கிறார்.

அம்மாவிடம் செல்லப் பிள்ளையாகவும் அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகனாகவும் நடிப்பிலும் வெரைட்டி காட்டி பின்னி பெடலெடுத்துள்ளார். ராஷ்மிகாவை கண்டதும் காதல், அதற்கு பின் ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி, யோகி பாபுவுடன் இணைந்து கொண்டு ரெட்டின் கிங்ஸ்லி போல காமெடி பண்ணுவது என ரசிகர்களை சிரிக்கவும் வைத்துள்ளார்.

Varisu Movie Review: 'வாரிசு' விமர்சனம்

விக்ரமன் படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பிரம்மாண்ட விஷுவல்ஸ் உடன் இயக்குநர் வம்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கான படமாகவே வாரிசு படத்தை இயக்கி உள்ளார்.

ஆக்‌ஷன், காமெடி, ஆட்டம் பாட்டம், சென்டிமென்ட் என பக்கா பேக்கேஜ் ஆக இந்த படம் உருவாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் கேமரா ஒர்க் நிச்சயம் ரசிகர்களை தியேட்டரில் ஆச்சர்யப்படுத்துகிறது.

தமன் இசையில் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரு பாடல்களும் தியேட்டர் மெட்டீரியல். ஓவர் எமோஷனலாக இல்லாமல் தேவையான எமோஷனல் வைத்த நிலையில் படம் தப்பித்தது.

செகண்ட் ஹாஃப் செல்லும் வேகத்திற்கு இணையாக முதல் பாதி இன்னமும் மெருகேற்றப்பட்டிருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த பொங்கல் பண்டிகையை ஜாலியாக சொந்தங்களுடன் கொண்டாடும் படமாக சில குறைகளுடன் உருவாகி இருக்கிறது விஜய்யின் வாரிசு திரைப்படம்.