விஷாலுடன் திருமணமா? விளக்கம் கொடுத்த நடிகை!

அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் திரையரங்கில் சரியாக ஓடவில்லை.

இதனால், இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

நயன்தாராவிடம் மோசமாக நடந்துகொண்ட நடன இயக்குநர்

தொடர்ந்து மார்க் ஆண்டனி என்கிற படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். விஷாலுக்கு, மார்க் ஆண்டனி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை அபிநயாவுடன் திருமணம் நடந்து விட்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அபிநயா, மார்க் ஆண்டனி படத்தில் நானும் விஷாலும் கணவன், மனைவியாக நடித்து வருகிறேன். அந்த புகைப்படங்கள் தான் சோஷியல் வெளியாகி சர்ச்சையாகி விட்டது.

நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பி விட்டார்கள் இது உண்மை இல்லை என்று விளக்கம் கொடுத்தார்.